caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 64

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:64

قَالَ هَلْ ءَامَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمْ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبْلُ فَٱللَّهُ خَيْرٌ حَٰفِظًا وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(யஅகூப்,) “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போல் தவிர இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? அல்லாஹ் மிக மேலான பாதுகாவலன்; அருள் புரிபவர்களில் அவன் மிக அதிகம் அருள் புரிபவன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(யஅகூப்) கூறினார்: “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போன்றே தவிர இவர் விஷயத்தில் நான் உங்களை நம்ப முடியுமா? ஆக, அல்லாஹ்வே மிக மேலான பாதுகாவலன். இன்னும், அவனே அருள் புரிபவர்களில் மிக அதிகம் அருள் புரிபவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi64. (அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70