قَالَ لَنْ أُرْسِلَهُۥ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًا مِّنَ ٱللَّهِ لَتَأْتُنَّنِى بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمْ فَلَمَّآ ءَاتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமானத்தை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமானத்தை கொடுக்கவே அவர் “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் (இன்னும் பொறுப்பாளன்) ஆவான்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(யஅகூப்) கூறினார்: “உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர, நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமொழியை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் நான் அனுப்பவே மாட்டேன்” என்று (யஅகூப்) கூறினார். அவர்கள், (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமொழியை கொடுக்கவே, “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் ஆவான்” என்று (யஅகூப்) கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi66. (அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.)