وَمَا تَكُونُ فِى شَأْنٍ وَمَا تَتْلُوا۟ مِنْهُ مِن قُرْءَانٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ وَلَآ أَصْغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرَ إِلَّا فِى كِتَٰبٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) நீர் எந்த செயலில் இருந்தாலும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சிகளாக நாம் இருந்தே தவிர அவற்றை (நீங்கள் செய்யமாட்டீர்கள்). பூமியிலோ வானத்திலோ ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனை விட்டு மறையாது. இதைவிட சிறிதும் இல்லை பெரிதும் இல்லை (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
Tamil Translation - Omar Sharif(நபியே) நீர் எந்த ஒரு செயலில் இருந்தாலும், இன்னும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், இன்னும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சியாளர்களாக (உங்களை கண்காணித்தவர்களாக) நாம் இருந்தே தவிர அவற்றை நீங்கள் செய்யமாட்டீர்கள். இன்னும், பூமியிலோ வானத்திலோ மிகச் சிறிய ஓர் எறும்பின் கனமளவும் உம் இறைவனை விட்டு மறையாது. இன்னும், இதைவிட சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை, (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi61. நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதிய போதிலும், (உங்கள் காரியங்களில்) நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.