وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம் மறுமை நாளில் என்ன? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம்தான் மறுமை நாளில் என்ன? (அல்லாஹ் அவர்களுடன் எப்படி நடந்து கொள்வான் என்று எண்ணுகிறார்கள்?) நிச்சயமாக (இந்த உலகத்தில்) அல்லாஹ் மனிதர்கள் எல்லோர் மீதும் அதிக அருளுடையவன். (ஆகவே, அவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவன். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.