caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 99

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:99

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِ أَلَآ إِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ سَيُدْخِلُهُمُ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦٓ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் வணக்கங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளாகவும் எடுத்துக் கொள்பர்களும் கிராம அரபிகளில் (சிலர்) உண்டு. அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு வணக்கமாகும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் நுழைப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifகிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் புண்ணியங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளை பெறும் வழியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு (நன்மை தரும்) புண்ணியமாக இருக்கும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi99. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70