وَٱلسَّٰبِقُونَ ٱلْأَوَّلُونَ مِنَ ٱلْمُهَٰجِرِينَ وَٱلْأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுஹாஜிர்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாமவர்களான முந்தியவர்கள், இன்னும் இவர்களை நல்லறத்தில் பின்பற்றிய(மற்ற)வர்கள் ஆகிய இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) ஏற்படுத்தினான். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharif(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi100. முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.