caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 98

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:98

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாங்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்பவர்களும் கிராம அரபிகளில் உண்டு. உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் மீதுதான் வேதனையின் சுழற்சி உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும், உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை (கெடுதிகள் நிகழ்வதை) எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மீதுதான் தண்டனையின் சுழற்சி (-கெடுதி இறங்க) உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi98. (கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70