caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 76

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:76

فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضْلِهِۦ بَخِلُوا۟ بِهِۦ وَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே (தங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது) விலகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். இன்னும், (தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றாது) விலகிவிட்டனர். அவர்கள் (எப்போதும் தாங்கள் வாக்குறுதிகளை) புறக்கணிப்பவர்களே.
Tamil Translation - Abdulhamid Baqawi76. அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70