وَمِنْهُم مَّنْ عَٰهَدَ ٱللَّهَ لَئِنْ ءَاتَىٰنَا مِن فَضْلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“(அல்லாஹ்) தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்தவர்களும் அவர்களில் உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; இன்னும், நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தவர்களும் அவர்களில் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi75. அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்.