caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 77

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:77

فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِى قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُۥ بِمَآ أَخْلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ يَكْذِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கும் நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தை முடிவாக்கினான்.
Tamil Translation - Omar Sharifஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கின்ற நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தையே முடிவாக (இறுதி வரை) அல்லாஹ் ஆக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. ஆகவே, அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தை ஏற்படுத்தி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70