caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 69

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:69

كَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَٰلًا وَأَوْلَٰدًا فَٱسْتَمْتَعُوا۟ بِخَلَٰقِهِمْ فَٱسْتَمْتَعْتُم بِخَلَٰقِكُمْ كَمَا ٱسْتَمْتَعَ ٱلَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَٰقِهِمْ وَخُضْتُمْ كَٱلَّذِى خَاضُوٓا۟ أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களைவிட பலத்தால் கடுமையானவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். (அவர்கள் இவ்வுலகில்) தங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தது போன்று, (நீங்களும்) உங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தீர்கள். அவர்கள் (பரிகசிப்பதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)
Tamil Translation - Omar Sharif(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களை விட வலிமையால் பலமிகுந்தவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். ஆக, (அவர்கள் இவ்வுலகில்) தங்களுக்கு கிடைத்த உலக பங்கை சுகமாக அனுபவித்தார்கள். இன்னும், உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்களது உலக பங்கை (இவ்வுலகில்) சுகமாக அனுபவித்தது போன்று, (நீங்களும்) உங்கள் அதிர்ஷ்டத்தை சுகமாக அனுபவித்தீர்கள். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், - இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. இன்னும், அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi69. (நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக்கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70