وَعَدَ ٱللَّهُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا هِىَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சக ஆண்களுக்கும் நயவஞ்சக பெண்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுவே அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். அல்லாஹ் அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
Tamil Translation - Omar Sharifநயவஞ்சகமுடைய ஆண்களுக்கும் நயவஞ்சகமுடைய பெண்களுக்கும் (எல்லா) நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்குவார்கள். அதுவே, அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். இன்னும், அல்லாஹ் அவர்களைச் சபித்தான். இன்னும், (அங்கு) நிலையான நிரந்தரமான தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi68. நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.