وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُوا۟ حَتَّىٰٓ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوٓا۟ أَن لَّا مَلْجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவர் மீதும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாகும் வரையும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்களும் நெருக்கடியாகும் வரை (அவர்கள் பிற்படுத்தப்பட்டனர்). அல்லாஹ்விடமிருந்து (தப்பி) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்துவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாக ஆகியது. இன்னும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்கள் நெருக்கடியாக ஆகியது. இன்னும், அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி(யாக அறிந்து) கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வை விட்டுத் தப்புமிடம் அவனிடமே தவிர வேறு அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.