caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 107

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:107

وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًۢا بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَآ إِلَّا ٱلْحُسْنَىٰ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَٰذِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகெடுதல் செய்வதற்காகவும் நிராகரிப்பிற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிப்பதற்காகவும் முன்னர் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர்பார்த்தும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக்கொண்டவர்களும் (அவர்களில் உள்ளனர்). “நாங்கள் நன்மையைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கெடுதல் செய்வதற்காகவும்; நிராகரிப்பிற்காகவும்; நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு முன்னர் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர் பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக் கொண்டவர்களும் (மதீனாவிலும் மதீனாவை சுற்றிலும்) இருக்கிறார்கள். இன்னும், “நாங்கள் நன்மையைத் தவிர (கெட்டதை) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் அவர்கள் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi107. எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70