caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 108

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:108

لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا۟ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒருபோதும் அதில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70