وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَٰكِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம்மைச் சிறைப்படுத்த அல்லது உம்மைக் கொல்ல அல்லது உம்மை வெளியேற்ற நிராகரிப்பவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்த சமயத்தை நினைவு கூருங்கள். (அவர்கள்) சூழ்ச்சி செய்கின்றனர்; அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைச் சிறைப்படுத்துவதற்கு; அல்லது, அவர்கள் உம்மைக் கொல்வதற்கு; அல்லது, உம்மை வெளியேற்றுவதற்கு உமக்கு சூழ்ச்சி செய்த சமயத்தை நினைவு கூர்வீராக. (அவர்கள்) சூழ்ச்சி செய்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.