وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا قَالُوا۟ قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هَٰذَآ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் வசனங்கள் அவர்கள் மீது ஓதப்பட்டால் “(நாம் இதை முன்பே) செவியேற்று விட்டோம்; நாம் நாடியிருந்தால் இது போன்று கூறியிருப்போம். முன்னோரின் கட்டுக் கதைகளே தவிர இவை வேறு இல்லை” என்று கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifநம் வசனங்கள் (நிராகரிக்கின்ற) அவர்கள் மீது ஓதப்பட்டால், “(நாம் இதை முன்பே) திட்டமாக செவியேற்று விட்டோம். நாம் நாடியிருந்தால் இது போன்று கூறியிருப்போம். முன்னோரின் கட்டுக் கதைகளாகவே தவிர இவை இல்லை” என்று கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.