caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 29

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:29

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவன் உங்களுக்கு (எதிரிகளின் பொய்யையும் உங்களின் உண்மையை பிரித்தறிவிக்கும்) ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவான், உங்களை விட்டு உங்கள் பாவங்களை அகற்றி விடுவான், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவன் உங்களுக்கு (எதிரிகளின் பொய்யையும் உங்களின் உண்மையை பிரித்தறிவிக்கும்) ஒரு வித்தியாசத்தை (-ஓர் அளவுகோலை) ஏற்படுத்துவான்; இன்னும், உங்களை விட்டு உங்கள் பாவங்களை அகற்றி விடுவான்; இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70