هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُۥ يَوْمَ يَأْتِى تَأْوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشْفَعُوا۟ لَنَآ أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ قَدْ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள் “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆகவே சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே. அல்லது நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்கே நஷ்டமிழைத்துக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த (சிலைகள் போன்ற)வை அவர்களை விட்டு மறைந்துவிட்டன.
Tamil Translation - Omar Sharif(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள், “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆக, சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே! அல்லது, நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனர். இன்னும், (இவைதான் எங்கள் கடவுள்கள் என்று) அவர்கள் புனைந்து கொண்டிருந்த (சிலைகள்; இன்னும், அவை போன்ற)வை எல்லாம் அவர்களை விட்டு (அந்நாளில்) மறைந்துவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.