caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 172

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:172

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا۟ بَلَىٰ شَهِدْنَآ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَٰفِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் இறைவன் ஆதமின் சந்ததிகளில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை எடுத்த சமயத்தை நினைவு கூருவீராக. “நான் உங்கள் இறைவனாக இல்லையா?” (என்று வினவி) அவர்களை அவர்கள் மீதே சாட்சியாக்கினான். “ஏன் இல்லை, (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி கூறினோம்” என்று (அவர்கள்) கூறினர். நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)தை விட்டு கவனமற்றவர்களாக இருந்தோம் என்று மறுமை நாளில் நீங்கள் கூறாமல் இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன் இதை நினைவூட்டுகிறான்).
Tamil Translation - Omar Sharif(நபியே!) இன்னும் உம் இறைவன் ஆதமின் சந்ததிகளில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை எடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. இன்னும், “நான் உங்கள் இறைவனாக இல்லையா?” (என்று வினவி) அவர்களை அவர்களுக்கே சாட்சியாக்கினான். “ஏன் இல்லை, (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி கூறினோம்” என்று (அவர்கள்) கூறினர். நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)தை விட்டு கவனமற்றவர்களாக இருந்தோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாமல் இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன் இதை நினைவூட்டுகிறான்).
Tamil Translation - Abdulhamid Baqawi172. (நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70