caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 173

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:173

أَوْ تَقُولُوٓا۟ إِنَّمَآ أَشْرَكَ ءَابَآؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنۢ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلْمُبْطِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது இணைவைத்ததெல்லாம் முன்னர் எங்கள் மூதாதைகள்தான். (நாங்கள்) அவர்களுக்குப் பின்னர் (தோன்றிய) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) பொய்யர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா? என்று கூறாதிருப்பதற்காக... (இதை இன்று நினைவூட்டுகிறோம்).
Tamil Translation - Omar Sharifஅல்லது, இதற்கு முன்னர் இணைவைத்ததெல்லாம் எங்கள் மூதாதைகள்தான். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் (அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்ற) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) வீணர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா?” என்று கூறாதிருப்பதற்காக (இதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi173. அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70