caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 171

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:171

وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூருங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்).
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi171. தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70