قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர வணங்கப்படும் இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வையும் இன்னும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்கிற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரைப் பின்பற்றுங்கள்!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi158. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.