caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 157

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:157

ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத் இன்னும் இன்ஜீலில் குறிப்பிடப்பட்டவராக தாங்கள் காண்கின்ற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியான இத்தூதரை பின்பற்றுவார்கள். (இத்தூதர்) அவர்களுக்கு நன்மையை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார். அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட ஒளியை (குர்ஆனை) பின்பற்றுகிறவர்கள் அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியாகிய இத்தூதரை பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள். அவர்களுக்கு நன்மையை அவர் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார்; இன்னும், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; இன்னும், கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார்; இன்னும், அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட (குர்ஆன் என்ற) ஒளியை பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi157. (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70