caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 145

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:145

وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லாவற்றின் அறிவுரையையும் எல்லாவற்றுக்குரிய விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீங்கள் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்லத்தை உங்களுக்குக் காண்பிப்பேன்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், (படைக்கப்பட்ட) ஒவ்வொரு பொருளிலிருந்து (அறிய வேண்டிய படிப்பினையையும்) அறிவுரையையும் (அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் தொடர்பான) ஒவ்வொன்றின் விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீர் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்ல(மாகிய நரக)த்தை உங்க(ளில் யார் எனக்கு மாறு செய்கிறார்களோ அவர்)ளுக்குக் விரைவில் காண்பிப்பேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi145. (நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70