caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 144

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:144

قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِى وَبِكَلَٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“மூஸாவே! என் தூதுகளுக்கும், என் பேச்சுக்கும் மக்களைவிட நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, நான் உமக்கு கொடுத்ததைப் பற்றிப்பிடிப்பீராக. நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவீராக” என்று கூறினான் (இறைவன்).
Tamil Translation - Omar Sharif(இறைவன்) கூறினான்: “மூஸாவே! என் தூதுசெய்திகளுக்கும், நான் பேசுவதற்கும் மக்களைவிட நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, நான் உமக்கு கொடுத்ததைப் பற்றிப்பிடிப்பீராக. இன்னும், நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவீராக!”
Tamil Translation - Abdulhamid Baqawi144. (அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70