caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:52

وَلَا تَطْرُدِ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தங்கள் இறைவனை அவனின் முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) தங்கள் இறைவனை - அவனின் முகத்தை நாடியவர்களாக - காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை (உங்கள் சபையிலிருந்து) விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே. (உமது செயல்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் செயல்களைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.)
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70