وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை” என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக! அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகிக் கொள்வதற்காகவும்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை’’ என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகுவதற்காகவும்).
Tamil Translation - Abdulhamid Baqawi51. (நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.