وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُم بِبَعْضٍ لِّيَقُولُوٓا۟ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيْهِم مِّنۢ بَيْنِنَآ أَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِٱلشَّٰكِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம், இறுதியில் "எங்களுக்கு மத்தியிலிருந்து இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?” என்று அவர்கள் கூறுவார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
Tamil Translation - Omar Sharifஇவ்வாறே, அவர்களில் சிலரை சிலர் மூலம் சோதித்தோம். இறுதியில், “எங்களுக்கு மத்தியிலிருந்து (நம்பிக்கை கொண்ட) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?’’ என்று அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) கூறுகிறார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi53. (நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?