قُل لَّآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ لَكُمْ إِنِّى مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றமாட்டேன்.” (நபியே!) கூறுவீராக: "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: ”அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றமாட்டேன்.’’ (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?’’
Tamil Translation - Abdulhamid Baqawi50. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.