caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:34

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا۟ عَلَىٰ مَا كُذِّبُوا۟ وَأُوذُوا۟ حَتَّىٰٓ أَتَىٰهُمْ نَصْرُنَا وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِ وَلَقَدْ جَآءَكَ مِن نَّبَإِى۟ ٱلْمُرْسَلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும்வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுத்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. தூதர்களின் செய்தியில் சில உமக்கு திட்டமாக வந்துள்ளது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் சகித்து பொறுமையாக இருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், தூதர்களின் செய்தியில் பல உமக்கு திட்டமாக வந்துள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi34. உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே! நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70