caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 35

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:35

وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَٰهِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரிதாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடி, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் இயன்றால்... (கொண்டு வாரீர்.) அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரி(ய சுமையான)தாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடிச் சென்று, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் சக்தி பெற்றால் அப்படி கொண்டு வருவீராக. இன்னும், அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. (நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70