caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 153

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:153

وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًا فَٱتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக இது என் நேரான பாதையாகும். அதைப் பின்பற்றுங்கள்; (மற்ற) வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான்” (என்று கூறுவீராக).
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக (இஸ்லாமாகிய) இது என் நேரான பாதை (-மார்க்கம்) ஆகும். ஆக, அதைப் பின்பற்றுங்கள்; இன்னும், (அதைத் தவிர மற்ற) பாதைகளை (-கொள்கைகளைப்) பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய பாதையிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். இவை, - நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றின் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi153. ‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70