caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 146

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:146

وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا كُلَّ ذِى ظُفُرٍ وَمِنَ ٱلْبَقَرِ وَٱلْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ أَوِ ٱلْحَوَايَآ أَوْ مَا ٱخْتَلَطَ بِعَظْمٍ ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِبَغْيِهِمْ وَإِنَّا لَصَٰدِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நகமுடைய (பிராணிகள் ஒட்டகம், தீக்கோழி, வாத்து வகைகள்) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்துள்ள அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) பிளவுபடாத குளம்புகளை உடைய பிராணிகள் (ஒட்டகம், தீக்கோழி, வாத்து போன்றவை) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் சுமந்துள்ள; அல்லது, சிறு குடல்கள் சுமந்துள்ள; அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.
Tamil Translation - Abdulhamid Baqawi146. (நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70