caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 145

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:145

قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُۥ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் (எதையும்) காணவில்லை. (ஆனால்) செத்ததாக அல்லது ஓடக்கூடிய இரத்தமாக, பன்றியின் மாமிசமாக -ஏனெனில் நிச்சயமாக அது அசுத்தமானதாகும்- அல்லது பாவமாக அல்லாஹ் அல்லாதவருக்குப் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக இருந்தால் தவிர (இவை தடுக்கப்பட்டவையாகும்). பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக எவர் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை, (ஆனால் கால் நடைகளில் தானாக) செத்ததாக; அல்லது, ஓடக்கூடிய இரத்தமாக; அல்லது, பன்றியின் மாமிசமாக; - ஏனெனில், நிச்சயமாக அது அசுத்தமானதாகும். - அல்லது, அல்லாஹ் அல்லாதவருக்காக பாவமான முறையில் (மற்றவர்களின்) பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக இருந்தால் தவிர. (இவை அனைத்தும் தடுக்கப்பட்டவையாகும்.) ஆக, யார் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi145. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70