caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 144

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:144

وَمِنَ ٱلْإِبِلِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْبَقَرِ ٱثْنَيْنِ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்றும் நபியே! கேட்பீராக). கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்று நபியே! கேட்பீராக). ஆக, கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி நடத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi144. ஒட்டகையிலும் (ஆண், பெண்) இருவகை, பசுவிலும் இருவகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?'' என்றும் நபியே! நீர் அவர்களைக் கேட்பீராக. கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70