وَقَالُوا۟ هَٰذِهِۦٓ أَنْعَٰمٌ وَحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعْمِهِمْ وَأَنْعَٰمٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَٰمٌ لَّا يَذْكُرُونَ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا ٱفْتِرَآءً عَلَيْهِ سَيَجْزِيهِم بِمَا كَانُوا۟ يَفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (மற்றவர்) அவற்றைப் புசிக்கமாட்டார் என்று தங்கள் எண்ணப்படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள் (இவ்வாறு அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது இட்டுக் கட்டுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi138. (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.