caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 139

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:139

وَقَالُوا۟ مَا فِى بُطُونِ هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ خَالِصَةٌ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزْوَٰجِنَا وَإِن يَكُن مَّيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَآءُ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள்” என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்தக்)கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் ஞானவான், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள் (-எங்கள் பெண்களும் அதை சாப்பிடலாம்)’’ என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi139. மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70