وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ ٱلْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَٰدِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا۟ عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வழிபாட்டை குழப்புவதற்காகவும் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் இட்டுக்கட்டுவதுடன் (விட்டு) விடுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வணக்க வழிபாட்டை குழப்புவதற்காகவும் அவர்களின் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதுடன் விட்டுவிடுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi137. இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக.