caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 136

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:136

وَجَعَلُوا۟ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلْحَرْثِ وَٱلْأَنْعَٰمِ نَصِيبًا فَقَالُوا۟ هَٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَٰذَا لِشُرَكَآئِنَا فَمَا كَانَ لِشُرَكَآئِهِمْ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمْ سَآءَ مَا يَحْكُمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விற்கு அவன் படைத்த விவசாயம், கால்நடைகளிலிருந்து ஒரு பாகத்தை ஆக்கினார்கள். தங்கள் எண்ணப்படி "இது அல்லாஹ்விற்கு, இது எங்கள் தெய்வங்களுக்கு” என்றும் கூறினர். அவர்களுடைய தெய்வங்களுக்குரியது அல்லாஹ்வின் பக்கம் சேராது. அல்லாஹ்வுக்குரியது அவர்களுடைய தெய்வங்களின் பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) தீர்ப்புசெய்வது கெட்டு விட்டது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi136. விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘‘இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்கள் தெய்வங்களுக்கு'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாக இருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70