هُوَ ٱلَّذِىٓ أَخْرَجَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مِن دِيَٰرِهِمْ لِأَوَّلِ ٱلْحَشْرِ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا۟ وَظَنُّوٓا۟ أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِى ٱلْمُؤْمِنِينَ فَٱعْتَبِرُوا۟ يَٰٓأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்தவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து முதல் முறை (ஷாம் தேசத்தில் அவர்களை) ஒன்று சேர்ப்பதற்காக வெளியாக்கினான். அவர்கள் வெளியேறுவார்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் எண்ணவில்லை. தங்களது கோட்டைகள் தங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கும் என நிச்சயமாக அவர்கள் எண்ணினார்கள். ஆனால், அல்லாஹ் (தனது தண்டனை) அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் அவர்களிடம் (கொண்டு) வந்தான். அவர்களின் உள்ளங்களில் அவன் திகிலைப் போட்டான். தங்கள் வீடுகளை தங்கள் கரங்களினாலும் (முஃமின்களுக்கு பணியாததால்) முஃமின்களின் கரங்களினாலும் நாசப்படுத்தினர். ஆகவே, அகப்பார்வை உடையவர்களே! படிப்பினை பெறுங்கள்!
Tamil Translation - Omar Sharifஅவன்தான் வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்தவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து முதல் முறை (ஷாம் தேசத்தில் அவர்களை) ஒன்று திரட்டுவதற்காக வெளியாக்கினான். அவர்கள் (மதீனாவை விட்டு) வெளியேறுவார்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் நினைத்துப்பார்க்கவில்லை. தங்களது கோட்டைகள் தங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கும் என நிச்சயமாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அல்லாஹ், (தனது தண்டனையை) அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் அவர்களிடம் (கொண்டு) வந்தான். அவர்களின் உள்ளங்களில் அவன் திகிலைப் போட்டான். அவர்களுடைய வீடுகளை அவர்களின் கரங்களினால்; இன்னும், (முஃமின்களுக்கு அவர்கள் பணியாததால்) முஃமின்களின் கரங்களினால் நாசப்படுத்திக் கொண்டனர். ஆகவே, பார்வை உடையவர்களே! படிப்பினை பெறுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi2. வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்கள் கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்கள் வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதைக் கொண்டு) நீங்கள் அறிவுணர்ச்சி பெறுவீர்களாக!