caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 3

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:3

وَلَوْلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيْهِمُ ٱلْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِى ٱلدُّنْيَا وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابُ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களின் இல்லங்களில் இருந்து) வெளியேறுவதை அல்லாஹ் அவர்கள் மீது விதித்து இருக்கவில்லை என்றால் இவ்வுலகிலேயே அவர்களை அவன் கண்டிப்பாக (கடுமையான தண்டனையால்) வேதனை செய்து இருப்பான். அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharif(அவர்களின் இல்லங்களில் இருந்து) வெளியேறுவதை அல்லாஹ் அவர்கள் மீது விதித்திருக்கவில்லை என்றால் இவ்வுலகிலேயே அவர்களை அவன் கண்டிப்பாக (கடுமையான தண்டனையால்) தண்டித்திருப்பான். இன்னும், அவர்களுக்கு மறுமையில் நரக தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70