لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِٱلْبَيِّنَٰتِ وَأَنزَلْنَا مَعَهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلْقِسْطِ وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلْغَيْبِ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் தராசையும், -மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாம் இறக்கினோம். அதில் கடுமையான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும் அவனுக்கும் (-அல்லாஹ்விற்கும்) அவனது தூதர்களுக்கும் மறைவில் உதவி செய்கின்றவரை (வெளிப்படையாக) அல்லாஹ் அறிவதற்காகவும் (இரும்பை அல்லாஹ் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். இன்னும், அவர்களுடன் வேதத்தையும் தராசையும் - மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும், இரும்பையும் நாம் (உங்களுக்கு) உருவாக்கினோம் (-சுரங்கங்களிலிருந்து வெளியாக்கிக் கொடுத்தோம்). அதில் உறுதியான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்பவரை (வெளிப்படையாக நீங்கள் அறியும்படி) அல்லாஹ் அறிவதற்காகவும் (அல்லாஹ் இரும்பைப் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கிறது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.