وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَٰهِيمَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ فَمِنْهُم مُّهْتَدٍ وَكَثِيرٌ مِّنْهُمْ فَٰسِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஆக்கினோம். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஏற்படுத்தினோம். ஆக, அவர்க(ளுடைய சந்ததி)களில் நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். இன்னும், அவர்க(ளுடைய சந்ததி)களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தான். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகிவிட்டனர்.