caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hadid அத்தியாயம், வசனம் 24

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 94 · 57:24

ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள், இன்னும் மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள். யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ (அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார்.) நிச்சயமாக அல்லாஹ் தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது புகழ் குறையாது.)
Tamil Translation - Omar Sharifஇவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள். இன்னும், மக்களை கருமித்தனத்திற்கு ஏவுகிறார்கள் (-ஊக்குவிக்கிறார்கள், தூண்டுகிறார்கள்). யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது கண்ணியமும் புகழும் குறையாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi24. எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70