جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَٰٓئِدَ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களுக்கு புனித வீடாகிய கஅபாவையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலிப் பிராணியையும், மாலையிடப்பட்ட பலிப் பிராணிகளையும் வாழ்வளிக்கக்கூடியதாக அல்லாஹ் ஆக்கினான். அது, வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.
Tamil Translation - Omar Sharifபுனித வீடாகிய கஅபாவை மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ் ஆக்கினான். இன்னும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை (இடப்பட்ட பலி)களையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ் ஏற்படுத்திய)து ஏனெனில், வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்).