caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 96

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:96

أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَٰعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனளிப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi96. (நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70