وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَٰكِن لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தனக்கு முன்னுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, அதைப் பாதுகாக்கக்கூடியதாக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். ஆகவே அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டே அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டு அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் எதில் முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிய (இவ்வேதத்)தின் மூலமே அவர்களுக்கு மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டுவிட்டு அவர்களுடைய மன விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு (ஷரீஅத்தை உடைய) சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்த (வேதத்)தில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் போட்டிபோட்டு முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை (அதற்கு கூலி கொடுப்பதன் மூலம் மறுமையில்) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (உண்மையை பின்பற்றியவர்கள் அல்லாஹ்வின் அருளிலும் பொய்யை பின்பற்றியவர்கள் தண்டனையிலும் இருப்பார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi48. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.