سَمَّٰعُونَ لِلْكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحْتِ فَإِن جَآءُوكَ فَٱحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْـًٔا وَإِنْ حَكَمْتَ فَٱحْكُم بَيْنَهُم بِٱلْقِسْطِ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள், ஆகாத செல்வத்தை அதிகம் விழுங்குகிறார்கள். இவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள்) பொய்(யான செய்தி)களுக்குத்தான் அதிகம் செவிசாய்க்கிறார்கள்; தவறான (-பாவமான) வருமானத்தை அதிகம் விழுங்குகிறார்கள். ஆக, (நபியே) அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக; அல்லது, அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. இன்னும், நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோர் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.