وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْـَٔاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் செய்தியை உண்மையில் அவர்கள் முன் ஓதுவீராக. இருவரும் ஒரு 'குர்பானி' (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) "நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்” என்றார். (ஏற்கப்பட்டவர்) "அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் உண்மையான செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. இருவரும் ஒரு குர்பானி (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) “நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்’’ என்றார். (ஏற்கப்பட்டவர்) “அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்’’ என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. (நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்.